என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஜாப்ரா ஆர்சர்
நீங்கள் தேடியது "ஜாப்ரா ஆர்சர்"
உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு தொடர்ந்து காயம் ஏற்பட்டு வருவதால், அந்த அணி சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.
இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதுவரை உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் இருக்கும் இங்கிலாந்து, கடந்த உலகக்கோப்பைக்குப்பின் அணியை வலுவாக கட்டமைத்தது. கடந்த நான்கு வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடம் வகிக்கிறது.
அந்த அணி ஏராளமான ஆல்-ரவுண்டர்களை கொண்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட், ஜாப்ரா ஆர்சர், மொயீன் அலி என ஆல்-ரவுண்டர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதற்காக பீல்டிங் பயிற்சி மேற்கொண்டபோது அந்த அணியின் கேப்டன் மோர்கனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
நேற்றைய போட்டியின்போது வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட், அவரது 4-வது ஓவரை வீசும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு மாற்று வீரராக பீல்டிங் செய்ய வந்த ஜாப்ரா ஆர்சர் பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்குப்பின் மீண்டும் களம் இறங்கினார். இருவரும் தொடர்ச்சியாக 140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவர்கள் என்பதால் இங்கிலாந்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் சுழற்பந்து வீச்சாளரான லியாம் டாசனின் வலது கையில் உள்ள மோதிர விரலின் தோல் கிழிந்தது. நேற்று ஒரேநாளில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மார்க் வுட்டுக்கு முன்னெச்சரிக்கை காரணமாக ஸ்கேன் செய்து பார்க்கப்படுகிறது. இலேசான காயமாக இருந்தால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும். ஆர்சருக்கு லேசான காயம்தான். அதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மருத்துக்குழு தெரிவித்துள்ளது. 15 பேரில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது, அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இறுதி பட்டியலை வெளியிட்டது இங்கிலாந்து. ஜாப்ரா ஆர்சர் அணியில் இடம்பிடித்துள்ளார்.
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.
கடந்த மாதம் 20-ந்தேதிக்குள் முதற்கட்ட அணியை அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கூறியிருந்தது. ஆனால் நாளைமறுநாள் (மார்ச் 23-ந்தேதி) வரை தேவைப்பட்டால் அணியில் உள்ள வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று பாகிஸ்தான் அணி மூன்று வீரர்களை மாற்றியிருந்தது. இங்கிலாந்து அணியின் முதற்கட்ட பட்டியலில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜாப்ரா ஆர்சர், லியாம் டாசன் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆர்சர் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் இன்று இங்கிலாந்து 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் ஆர்சர், டாசன் இடம்பிடித்துள்ளனர்.
15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. மோர்சன் (கேப்டன்), 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. ஜோஸ் பட்லர், 5. டாம் குர்ரான், 6. லியாம் டாசன், 7. லியாம் பிளங்கெட், 8. அடில் ரஷித், 9. ஜோ ரூட், 10. ஜேசன் ராய், 11. பென் ஸ்டோக்ஸ், 12. ஜேம்ஸ் வின்ஸ், 13. கிறிஸ் வோக்ஸ், 14. மார்க்வுட். 15. ஜாப்ரா ஆர்சர்.
முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த அலேக்ஸ் ஹேல்ஸ், ஜோ டென்லி ஆகியோர் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.

மே மாதம் 30-ந்தேதி தொடங்கும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜாப்ரா ஆர்சர்-க்கு இடமில்லை. #WorldCup2019
இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை மாதம் 14-ந்தேதி வரை 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய வீரர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி 15 பேர் கொண்ட வீரர்களின் தொடக்க பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜாப்ரா ஆர்சர் பெயர் இடம் பெறவில்லை. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.
உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் பட்டியல்:-
1. மோகன் (கேப்டன்), 2. பேர்ஸ்டோவ், 3. ஜேசன் ராய், 4. ஜோ ரூட், 5. பென் ஸ்டோக்ஸ், 6. ஜோஸ் பட்லர், 7. மொயீன் அலி, 8. கிறிஸ் வோக்ஸ், 9. லியாம் பிளங்கெட், 10. அடில் ரஷித், 11. மார்க் வுட், 12. அலேக்ஸ் ஹேல்ஸ், 13. டாம் குர்ரான், 14. ஜோ டென்லி, 15. டேவிட் வில்லே.

டி20 கிரிக்கெட்டில் பும்ராதான் தலைசிறந்த பவுலர் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாப்ரா ஆர்சர் தெரிவித்துள்ளார். #Bumrah
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்து வீச்சில் அசத்தி வருகிறார். அதேபோல் டி20 லீக் தொடரில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸில் பிறந்து, தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் ஜாப்ரா ஆர்சர் தற்போது ஏராளமான டி20 லீக்கில் விளையாடி வருகிறார். டி20 லீக்கில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமைக்குரிய வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.
82 போட்டிகளில் ஓவருக்கு சராசரியாக 7 ரன்களுக்கு கீழ் கொடுத்து 105 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ள ஜாப்ரா ஆர்சரிடம் டி20 கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளர்கள் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு ஜாப்ரா ஆர்சன் பதிலளிக்கையில் ‘‘டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த பந்து வீச்சாளர் என்றால் முதலிடம் பும்ராவிற்குதான். 2-வது இடம் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கானுக்கு கொடுப்பேன். நான், பும்ரா, ரஷித் கான் ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்கள்.
பும்ரா அவரது பந்து வீச்சு ஸ்டைலில் யார்க்கர் வீசுவது சிறப்பானது. அவரது ஆக்சனில் ‘ஸ்லோ’ டெலிவரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லாவித பந்து வீச்சுக்கும் ஒரே மாதிரியான ஆக்சன்தான் இருக்கும். இதனால் ‘ஸ்லோ’ பந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினம்’’ என்றார்.

×

X